சுரங்க பராமரிப்பு பணி.. சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 மாதத்துக்கு போக்குவரத்து மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நுங்கம்பாக்கம் லயோலா சுரங்கப்பாதை மற்றும் தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இவ்விரண்டு இடங்களிலும் நாளை முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி சுரங்கப்பாதை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இந்த பணி வரும் நாளை முதல் 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

traffic diversion in nungampakkam chennai for metro work

இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக நுங்கம்பாக்கம் போக்குவரத்து சுரங்கப்பாதை (லயோலா சுரங்கப்பாதை) நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் ஈ.வெ.ரா. சாலை நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு - அமைந்தகரை - புது ஆவடி சாலை சந்திப்பு - ஈகா பாய்ன்ட் சந்திப்பு - கெங்கு சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி - கெங்கு சுரங்கப்பாதை சாலை வழியாக - கிழக்கு மேயர் ராமநாதன் சாலை - மேயர் ராமநாதன் சாலை - சேத்துப்பட்டு பாய்ன்ட் சந்திப்பு - இடதுபுறம் - ஸடெர்லிங் பாய்ன்ட் சந்திப்பு - இடதுபுறம் - கல்லூரி சாலை வழியாக சென்றடையலாம்.

ஈ.வெ.ரா. சாலை சந்திப்பில் இருந்து நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக நுங்கம்பாக்கம் போக்குவரத்து சுரங்கப்பாதை (லயோலா சுரங்கப்பாதை) நோக்கி செல்லும் இதர வாகனங்கள் நெல்சன் மாணிக்கம் சாலை - மேத்தா நகர் சந்திப்பு - இடதுபுறம் - மேத்தா நகர் சாலை - ஆபிசர்ஸ் காலனி முதல் தெரு - வலதுபுறம் - புதுப்பாலம் - வெங்கடாசலபதி தெரு - ஹாரிங்டன் சாலை - வலதுபுறம் - ஹாரிங்டன் சுரங்கப்பாதை - சேத்துப்பட்டு பாய்ன்ட் சந்திப்பு - வலதுபுறம் - ஸடெர்லிங் பாய்ன்ட் சந்திப்பு - இடதுபுறம் - கல்லூரி சாலை வழியாக சென்றடையலாம் மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சூளைமேடு பாயின்ட் சந்திப்பு - இடதுபுறம் - நமசிவாயபுரம் பாலம் - சாரி சாலை - ஹாரிங்டன் சாலை - வலதுபுறம் - ஹாரிங்டன் சுரங்கப்பாதை - சேத்துப்பட்டு பாய்ன்ட் சந்திப்பு - வலதுபுறம் - ஸ்டெர்லிங் பாய்ன்ட் சந்திப்பு - இடதுபுறம் - கல்லூரி சாலை வழியாக சென்றடையலாம்.

சூளைமேடு நெடுஞ்சாலை வழியாக நுங்கம்பாக்கம் போக்குவரத்து சுரங்கப்பாதை (லயோலா சுரங்கப்பாதை) நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சூளைமேடு பாய்ன்ட் சந்திப்பு - நமசிவாயபுரம் பாலம் - சாரி சாலை - ஹாரிங்டன் சாலை - வலதுபுறம் - ஹாரிங்டன் சுரங்கப்பாதை - சேத்துப்பட்டு பாய்ன்ட் சந்திப்பு - வலதுபுறம் - ஸ்டர்லிங் பாய்ன்ட் சந்திப்பு - இடதுபுறம் - கல்லூரி சாலை வழியாக சென்றடையலாம்.

சேத்துப்பட்டு பாய்ன்ட் சந்திப்பில் இருந்து ஸ்டெர்லிங் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ஸ்டெர்லிங் பாய்ன்ட் சந்திப்பில் இருந்து இடதுபுறமாக திருப்பப்பட்டு கல்லூரி சாலை - ஹாடோஸ் சாலை - நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை - வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை - வீட் கிராப்ட் சாலை வழியாக ஸ்டர்லிங் சாலை சென்றடையலாம்.

மேற்கு மாம்பலத்திலிருந்து மெட்லி சுரங்கப்பாதை வழியாக தியாகராயநகர் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். அதில் மாற்றம் இல்லை. தி.நகரில் இருந்து மெட்லி சாலை வழியாக மேற்கு மாம்பலம் செல்லும் வாகனங்கள் மெட்லி சந்திப்பு- தெற்கு உஸ்மான் சாலை - புதிய போக் சாலை- 70 அடி சாலை -அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்லலாம். (அல்லது) மேட்லி சாலை சந்திப்பு- மேட்லி சாலை - முத்துரங்கன் சாலை- புதிய போக் சாலை- 70 அடி சாலை -அரங்கநாதன் சுரங்கப்பாதை வழியாக செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றம் நாளை முதல் தொடங்கி 2 மாதங்கள் வரை இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Chennai city traffic police will introduce traffic diversions on tomorow onwars for metro work on nungampakkam.
Please Wait while comments are loading...