கிருஷ்ணகிரி அருகே நடந்த விபத்தால், பெங்களூர்-சேலம் நெடுஞ்சாலையில் டிராபிக் நெரிசல்
கிருஷ்ணகிரி: தனியார் பஸ்சும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே இன்று மதியம் நடந்துள்ளது. இந்த கோர விபத்து காரணமாக, ஒசூர்-கிருஷ்ணகிரி நடுவே தேசிய நெடுஞ்சாலை-7ல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை எண்-7ல், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் நகரங்களுக்கு நடுவேயுள்ள மேலுமலை என்ற பகுதியில் இன்று மதியம் சுமார் 3 மணிக்கு இந்த விபத்து நடந்தது.

கிருஷ்ணகிரி-ஒசூர் நடுவே இயக்கப்படும் தனியார் பஸ் மற்றும் கார் மீது எதிரே வந்த லாரி அடுத்தடுத்து நேருக்கு நேர் மோதிய இந்த சங்கிலி தொடர் விபத்தில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டது. சம்பவ இடத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.

இந்த விபத்தால், பெங்களூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை-7ல் சம்பவ இடத்திலிருந்து இருபுறமும் 5 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
பஸ்-லாரி இரண்டுமே அப்பளம் போல நொறுங்கியிருந்ததாலும், உடல்கள் சிதறி கிடந்ததாலும், பிற வாகனங்களால் அந்த பகுதியை கடக்க முடியவில்லை. சுமார் 2 மணிநேரம் கடந்த பிறகே விபத்துக்குள்ளான வாகனங்கள் கிரேன்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு பிற வாகனங்களின் போக்குவரத்து தொடங்கியது.
ஒருசில தனியார் வாகனங்கள், தகவல் கேள்விப்பட்டு, ஒசூரிலிருந்து ராயக்கோட்டை வழியாக கிருஷ்ணகிரிக்கு சுற்றிக்கொண்டு சென்றன. காஷ்மீர்-கன்னியாகுமரியை இணைக்கும், தேசிய நெடுஞ்சாலையான என்.ஹெச்-7ல் அமைந்துள்ள இப்பகுதியில் தினசரி 25 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பயணம் மேற்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications