சென்னையில் இன்று பெய்யும் மழை ட்ரெயிலர்தான்.. டெல்டாவில்தான் வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று பெய்வது வெறும் ட்ரெயிலர் மழைதான் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல இடங்களில் ஓரிருமுறை விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் ஈசிஆர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

சென்னையில் கடந்த வாரம் கொட்டிய வடகிழக்குப் பருவமழை இந்த வாரம் ஓய்வெடுத்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் மீண்டும் சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.

சென்னையில் காலை முதல் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. நகரின் பல இடங்களில் பெய்து வரும் மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இது ட்ரெயிலர்தான்

இது ட்ரெயிலர்தான்

இந்நிலையில் சென்னையில் இன்று பெய்துவரும் மழை ட்ரெயிலர் தான் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் ஓரிரு முறை விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் ஈசிஆரில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

திரண்டு வரும் கருமேகங்கள்

திரண்டு வரும் கருமேகங்கள்

இந்த மழை மெதுவாக ஓஎம்ஆர் பகுதிக்கும் பரவும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறிள்ளார். இதுதொடர்பாக சென்னை மற்றும் தமிழகத்தை நோக்கி மழை மேகங்கள் திரண்டு வரும் புகைப்படங்களையும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மழை மேகங்கள் உருவாகும்

மழை மேகங்கள் உருவாகும்

ஆனால் இந்த மழையால் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிக்கும் வரை மழை மேகங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பலத்த தரைக்காற்று

பலத்த தரைக்காற்று

இந்த மழை மேகங்களால் கடலூர், டெல்டா மாவட்டங்கள் முதல் ராமநாதபுரம் வரை அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னை முதல் பாம்பன் வரை தரைக்காற்று பலமாக வீசும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Trailer show bands arrive - Expect one or two spells today and other parts of chennai may get one or two short spell said Tamilnadu weatherman.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற