தை பொங்கல் கொண்டாட சொந்த ஊர் போறீங்களா? ரயில் டிக்கெட் ரிசர்வேசன் தொடங்கிருச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தை பொங்கல் பண்டிகைக்கு ரயில் பயணம் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.

வரும் 2018, ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி , சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள்.

Train Ticket reservations for Pongal festival full within 10 minutes

பெரும்பாலோனோர் பயணத்திற்காக ரயில்களை தேர்வு செய்வார்கள். 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருப்பதால் , ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

ஜனவரி 13ஆம் தேதி இரவு பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.

ரயிலின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது போல தனியார் பேருந்துகளுக்கான இருக்கை முன்பதிவு நவம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The counters for the train ticket booking for the passengers on the occasion of the popular Pongal Festival were closed within 10 minutes as the reservations were full within that short period.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற