டிடிவி தினகரன் திருவண்ணாமலைக்கு பயணம் - மூக்குப்பொடி சித்தரிடம் மீண்டும் ஆசி?
மூக்குப்பொடி சித்தரை சந்திக்க டிடிவி தினகரன் திருவண்ணாமலைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: டிடிவி தினகரன் இன்று திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார். மூக்குப் பொடி சித்தரிடம் ஆசி பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிடிவி தினகரன் திடீர் பக்தராக மாறியுள்ள மூக்குப் பொடி சித்தர் திருவண்ணாமலையில் பிரபலமானவர். அவர் அருளாசி கொடுக்கும் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கிறது.

திருவண்ணாமலையில் ஏகப்பட்ட சாமியார்களைப் பார்க்கலாம். அழுக்குப் படிந்த தேகத்துடன், நீண்ட ஜடா முடியுடன் சுற்றிக் கொண்டிருக்கும் பலருக்கு பெரிய பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் எல்லாம் பக்தர்களாக இருப்பார்கள் என்பது ஆச்சரியமான ஒன்று.
பச்சை உடையணிந்து காணப்படும் மூக்குப்பொடி சித்தர் பெரும்பாலும் மெளனமாகவே இருப்பார். இவர் யாரையாவது நிமிர்ந்து பார்த்தால் அல்லது ஏதாவது பேசினால் அவர்களுக்கு அதுதான் அருளாசி. அந்த ஒரு வார்த்தைக்காகவே பல மணி நேரம் காத்திருப்பார்களாம் பக்தர்கள்.
திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன் கடந்த ஆகஸ்ட் மாதம் திருவண்ணாமலைக்கு சென்று மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றார்.
ஓபிஎஸ் ஈபிஎஸ் அணிகள் இணைந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் மீண்டும் இன்று திருவண்ணாமலை சென்று மூக்குப்பொடி சித்தரை சந்திக்கப் போகிறார். பார்க்கலாம், மூக்குப் பொடி சித்தரின் அருளாசி, தினகரனை உயர்த்துமா என்பதை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications