திருவண்ணாமலை மூக்குபொடி சித்தரிடம் ஆசி பெற்ற டிடிவி தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.

அதிமுக அம்மா அணியில் நொடிக்கு நொடி பரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார் தினகரன். இது எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.

TTV Dinakaran meets Mookupodi Swamygal

இந்த சூழ்நிலையில் நேற்று விழுப்புரம் கூட்டத்திற்கு சென்ற முதல்வர் பழனிச்சாமி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சென்று பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்றார்.

ஆதிபராசக்தி கருவறையில் 108 குங்கும அபிஷேகம் நடைபெற்றது. அதர்வண பத்ரகாளியையும் வணங்கினார். இதன்மூலம் எதிரிகளை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு கூட்டத்தில் பங்கேற்று பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

TTV Dinakaran meets Mookupodi Swamygal
TTV Dinakaran Looking for AIADMK Star Speakers | நமீதாவுக்கு கொக்கி போடும் தினகரன்- Oneindia Tamil

இதனிடையே பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்த டிடிவி தினகரன், இன்று திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்றார். அங்கே சென்று சில நிமிடங்கள் தியானம் செய்த அவர், மூக்குப்பொடி சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran has met Mookupodi Swamygal in Tiruvannamalai
Please Wait while comments are loading...