தமிழகம் முழுவதும் டூர் கிளம்பும் டிடிவி தினகரன் - நிர்வாகிகளை சந்திக்க திட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனை சந்தித்து ஆலோசனை நடத்தும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும், மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருகிறார்களாம். அதனை ஏற்று விரைவில் அவர் பயணம் கிளம்புவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலாவை சந்தித்து நிர்வாகிகள் கெஞ்சியது போல இப்போது டிடிவி தினகரனை நிர்வாகிகள் சந்தித்து தங்களின் ஆதரவை சந்தித்து பேசி வருகின்றனர்.

பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ பழனியப்பன், ஆரூர் எம்எல்ஏ முருகன் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுடன் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு கரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.

எம்எல்ஏக்கள் ஆலோசனை

எம்எல்ஏக்கள் ஆலோசனை

சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழ்நிலையிலும் டிடிவி தினகரனுடன் அவரது ஆதரவாளர்களான 30 எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர். இதனால் அதிமுக வரிசையில் ஏராளமான சீட்கள் காலியாக இருந்தன.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

நேற்று ஒவ்வொரு எம்எல்ஏவாக அவைக்கு வந்தனர். தினகரன் ஆதரவாளரான இன்பத்துரை மட்டுமே அவையில் இருந்தார். மற்ற எம்எல்ஏக்கள் அவையில் இல்லை. பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் அவைக்கு வந்தார்.

இவர்களை தவிர தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை.

நிர்வாகிகளும் வீட்டில் ஆலோசனை

நிர்வாகிகளும் வீட்டில் ஆலோசனை

தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதால் அந்த எம்எல்ஏக்கள் சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட எம்எல்ஏக்களுடன் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, தளவாய் சுந்தரம் ஆகியோரும் ஆலோசானை கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்

மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர் அனைவரும் 32 மாவட்டங்களிலும் விழா நடத்த உள்ளனர். அதுபோல டிடிவி தினகரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

டிடிவி தினகரன் தயார்

டிடிவி தினகரன் தயார்

90 நாட்கள் பொறுமையாக இருக்கச் சொல்லி சசிகலா கூறினாலும் தினசரியும் ஆதரவாளர்கள் சந்தித்து பேசி வருவதால் தெம்பாக இருக்கும் டிடிவி தினகரன் விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயண அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கலாம். அதிமுக தொண்டர்கள்தான் பாவம், எந்த அணிக்கு ஆதரவு தருவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said ADMK Amma team leader will begin a state-wide tour to meet supporters.
Please Wait while comments are loading...