For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

57,000 வீடுகள்.. நடமாடும் மருத்துவனை.. நீங்கள் படித்துக் கொண்டிருப்பது தினகரனின் தேர்தல் அறிக்கை!

ஆர்.கே.நகரில் 57ஆயிரம் வீடுகள் கட்டித்தருவோம் என்று அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் ஆர்.கே. நகரில் 57000 வீடுகள் கட்டித்தரப்படும், நிரந்தர வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.

ஆர்.கே. நகரில் ஏப்ரல் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதிமுக இரு அணிகளாக போட்டியிடுகிறது. அதிமுக அம்மா வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணியின் அதிமுக புரட்சித்தலைவி அம்மா வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார்.

TTV Dinakaran release election manifesto for RK Nagar bypoll

இரு அணி வேட்பாளர்களும் இடைத்தேர்தலுக்கு தனி தேர்தல் அறிக்கையை வெளியிடுகின்றனர். இந்த நிலையில் இன்று டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

•57000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும்

•ஆர்.கே.நகரில் உயர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்

•இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் அமைத்து தரப்படும்

•வாரத்தோறும் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும்

•ஆர்.கே. நகர் மக்களின் குறை தீர்க்க புதிய செயலி அறிமுகப்படும்

•மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு வங்கிகளின் கடன்

•கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு நவீனமயமாக்கப்படும்

•அரசு, தனியார் வங்கிக் கிளைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்

• நவீனமயமாக்கப்பட்ட மீன் அங்காடி அமைக்கப்படும்

• ஐஓசி பேருந்து நிலையம் தரம் உயர்த்தப்படும்

• கொருக்குப்பேட்டையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும்

• 117 கோடி செலவில் எண்ணூர் - மணலி இடையே மேம்பாலம் அமைக்கப்படும்

English summary
Sasikala led ADMK Amma party has released its manifesto for the RK Nagar by election today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X