சிறைக்குப் போய் 74 வயதில் வெளியே வந்தாலும் ரெய்டுக்கு காரணமானவர்களை பழி தீர்ப்பேன்.. தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு 54 வயதாகிறது என்றும் 20 ஆண்டுகள் சிறையில் போட்டாலும் 75 வயதில் வெளியே வந்து ரெய்டுக்கு காரணமானவர்களை தமிழகத்தில் கால் ஊன்ற விட மாட்டோம் என்று தினகரன் சூளுரைத்தார்.

சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான சென்னை, பெங்களூர் உள்ளிட்ட 190 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் அடையாறில் உள்ள தினகரன் வீடும் தப்பவில்லை என்று கூறப்படுகிறது.

TTV Dinakaran slams Central government

இந்நிலையில் ரெய்டு குறித்து தினகரன் அடையாறில் கூறுகையில், எங்கள் வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. சசிகலாவும் நானும் அரசியலில் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த சோதனை நடைபெறுகிறது.

எங்களை மிரட்டி பார்க்கவே இந்த சோதனை நடைபெறுகிறது. இதற்கு முழுக்க முழுக்க பாஜக அரசுதான் காரணம். நான், எனது சித்தி என 30 ஆண்டுகளுக்கு முன்பே சிறை சென்றவர்கள்.

எனது தந்தை க்கு 85 வயதாகிறது. அவர் முதல் தற்போது எங்கள் வீட்டில் பிறந்த குழந்தை வரை யாரும் எதற்கும் பயப்பட மாட்டோம். இந்த ரெய்டில் தூக்கு தண்டனை கொடுக்க முடியாது.

எனக்கு தற்போது 54 வயதாகிறது. என்னை 20 ஆண்டுகள் சிறையில் தூக்கி போட்டாலும், 74 வயதில் மீண்டும் வந்து ரெய்டுக்கு காரணமான கட்சிகளை விட மாட்டேன்.

புதுவை பண்ணை வீட்டில் ரெய்டு நடக்கிறது. அங்கு உரம்தான் கிடைக்கும். பண்ணை வீட்டில் எதையும் வைத்துவிட்டு எடுக்க முடியாது, சுற்றி கேமரா உள்ளது என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran says that he will do tit for tat after we made arrest in this raid.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற