திருச்சி பொதுக்கூட்டத்திற்கு அனுமதியில்லை - பழிவாங்கும் நடவடிக்கை என தினகரன் தரப்பு புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்சி உழவர் சந்தையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்துள்ளது பற்றி நீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

சசிகலாவினால் பதவி அளிக்கப்பட்டவர்கள் தற்போது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் புகழேந்தி கூறியுள்ளார்.

TTV Dinakaran supporter Pugazhendi condemns Trichy corporation

நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் 16ஆம் தேதி டிடிவி தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருச்சி உழவர்சந்தையில் வேறு ஒரு அமைப்பு கூட்டம் நடத்துவதால் அனுமதி இல்லை என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர காவல்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில் மாநகராட்சி அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கு டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களின் போராட்டம், பொதுக்கூட்டத்திற்கு தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதாக கூறியுள்ளார். நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிமன்ற அனுமதியோடு பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் புகழேந்தி கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
We have won and hold meeting in trichy said TTV Dinakaran supporter Pugazhenthi. Trichy corporation refused to give permission to TTV Dinakaran to organise pulic meeting for Neet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற