சேகர்பாபு சொன்னதுதான் நடக்குது போல....ஆர்கே நகரில் திமுகவினரை பர்சேஸ் செய்ததா தினகரன் கோஷ்டி?
ஆர்கே நகர் தொகுதியில் திமுகவினரை வளைத்துப் போடுவதில் தினகரன் கோஷ்டி படுமும்முரமாக இருப்பது அண்ணா அறிவாலயத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக நிர்வாகிகள் பலரை தினகரன் கோஷ்டி பர்சேஸ் செய்துவிட்டதோ என அதிர்ச்சியடைந்து போயுள்ளதாம் அண்ணா அறிவாலயம்.
ஆர்.கே.நகர் தொகுதியில் மக்களின் பிரச்சனைகளை அறிந்தவர் என்ற முழக்கத்துடன் வலம் வருகிறார் திமுக வேட்பாளர் மருது கணேஷ். மற்ற வேட்பாளர்களைப் போல அல்லாமல் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

சுணக்கமும் இணக்கமும்
மருதுகணேஷ் இடைவிடாது பிரசாரம் செய்த போதும் திமுக நிர்வாகிகள் பலரும் இன்னமும் சுணக்கமாக இருப்பதாக திமுக தலைமை நியமித்த குழுக்கள் அறிவாலயத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாம். அதில் திமுக நிர்வாகிகள் சிலர் தினகரன் தரப்புடன் இணக்கமாக இருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.

எச்சரித்த சேகர் பாபு
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் பேசிய சேகர் பாபு, அதிமுக வாக்குகள் என்னதான் பிரிந்து கிடந்தாலும் நமக்கு அவை வரப்போவதில்லை. அதேநேரத்தில் நமது நிர்வாகிகள், வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

வேறவழியே இல்லை
ஏனெனில் ஆர்கே நகரில் எப்படியும் வென்றாக வேண்டும் என நெருக்கடியில் களமிறங்கியுள்ளவர் தினகரன். தாம் வெல்வதன் மூலமே தமக்கான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என நம்புகிறவர் தினகரன்.

எல்லோரையும் வளையுங்க..
இதனால் பணத்தை வாரி இறைத்து வருகிறது தினகரன் கோஷ்டி. அத்துடன் மதுசூதனன் மற்றும் திமுக அணி நிர்வாகிகளையும் வளைத்துப் போடுவதிலும் தனிக்கவனம் செலுத்துகிறதாம் தினகரன் கோஷ்டி.

வைட்டமின் 'ப'
அதே நேரத்தில் திமுக தரப்பில் இன்னமும் நிர்வாகிகளுக்கு கூட பணம் சப்ளை செய்யப்படாததால் கடும் சோர்வில் இருக்கிறார்களாம்.. இப்படிப்பட்டவர்களைத்தான் குறிவைத்து தினகரன் கோஷ்டி வளைத்துக் கொண்டிருக்கிறதாம். இந்த தகவல் அண்ணா அறிவாலயத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications