For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீயருக்கும், விஜயேந்திரருக்கும் தொடர் டுவீட்டுகளில் கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்

ஆண்டாள் குறித்து விமர்சனம் செய்ததற்கு கண்டனம் என்ற பெயரில் ஜீயர் பேசியதற்கு டிடிவி தினகரன்கடும் எதிர்த்து தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஆண்டாள் குறித்து விமர்சனம் செய்வதற்கு கண்டனம் என்ற பெயரில் ஜீயர் பேசியதற்கும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கும் சடகோப ராமானுஜர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு ஆய்வறிக்கையில் வெளிநாட்டு எழுத்தாளர் ஆண்டாள் குறித்து கூறியிருந்ததை மேற்கோள் காட்டியிருந்தார்.

இது ஆண்டாளை தவறாக விமர்சிப்பது போன்ற அர்த்தத்தை கொடுப்தாக கூறப்படுகிறது. இதற்காக வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜீயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்து ஜீயர், வைரமுத்துவை கண்டித்து நடத்திய பொதுக் கூட்டத்தில் சாமியார்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்துவிட வேண்டாம் என்றும் எங்களுக்கு சோடா பாட்டில் வீச தெரியும் என்றும் தெரிவித்திருந்தார்.

அதிர்ச்சியாக உள்ளது

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது தொடர் டுவீட்டுகளில் தெரிவித்துள்ள பதிவுகளில், ஆண்டாள் பற்றி தவறான விமர்சனம் செய்தவர்களை கண்டிக்கிறோம் என்ற பெயரில் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் அவர்கள் பேசியிருக்கும் பேச்சுக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சராசரி மனிதர்களுக்கும் ஜீயர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களுக்கும் இடையேயான வித்தியாசமே வன்முறைகளற்ற சாத்வீகமும், கருணை உள்ளம் கொண்ட ஆன்மீகப் பணிகளும்தான்.

ஜீயர் ஸ்தானத்தில் உள்ளவர்

ஜீயர் ஸ்தானத்தில் உள்ளவர்

ஆனால் இந்த வேறுபாட்டை தகர்த்து, அதன்மூலம் ஆன்மீகத்திற்கே அவப்பெயர் உண்டாக்கும் விதமாக, ‘எங்களுக்கும் கல்லெறியத் தெரியும்... சோடா பாட்டில் வீசத் தெரியும்' என்றெல்லாம் பேச்சளவிற்குக் கூட ஒரு ஜீயர் ஸ்தானத்தில் இருப்பவர் பேசுவது ஏற்புடையது அல்ல... கண்டிக்கத்தக்கதும் ஆகும். அதேபோல, காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஒரு நிகழ்ச்சியில் தேசியகீதம் ஒலித்தபோது எழுந்து நின்றும், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது அமர்ந்திருந்ததும் தமிழர்களின் உணர்வை காயப்படுத்தியதை முன்பே சுட்டிக்காட்டியிருந்தேன்.

வருத்தம் தெரிவிக்க வேண்டும்

வருத்தம் தெரிவிக்க வேண்டும்

ஆனால் காஞ்சி மடத்திலிருந்து அடுத்தடுத்து வெளிவரும் கருத்துக்கள், எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற என்னைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை. இந்த சர்ச்சை மேலும் தொடராமல் இருக்கவேண்டுமானால், விஜயேந்திர சுவாமிகளே வருத்தத்துடன் கூடிய ஒரு விளக்கமளிப்பதே சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

மடாதிபதிகள்

பொதுவாகவே இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தவிர்த்து, ஆன்மீகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் ஜீயர்கள் மற்றும் மடாதிபதிகள் போன்ற ஆன்மீகப் பெரியவர்களின் சொல்லும் செயலும் எதிர்காலத்தில் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு தினகரன் தொடர் டுவீட்டுகளில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

English summary
TTV Dinakaran condemns Jeeyar for his Soda bottle and pelting stone incident. He also condemns Kanchi Sankara Math for Vijayendrar's irrespecting of Tamil Thaai Vazhthu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X