ஆர்.கே.நகரில் இன்று தேர்தல் நடந்தால் வெற்றி தினகரனுக்கே - ராஜநாயகம் 2வது சர்வே
ஆர்.கே. நகரில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தால் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன்தான் வெற்றி பெறுவார் என்று பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றால் டிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து இரண்டாவது முறையாக கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார் பேராசிரியர் ராஜநாயகம்.

பேராசிரியர் ராஜநாயகம்
பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பு சார்பில் கடந்த வாரம் வெளியான கருத்துக்கணிப்பில், டி.டி.வி.தினகரனின் பிரஷர் குக்கர் சின்னத்தை அத்தொகுதியிலுள்ள 91.6 சதவீதம் மக்கள் எளிதாக அடையாளம் காண்கிறார்கள் என்று கூறியிருந்தார். இம்முறை இது 97.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தினகரன் பிரச்சார யுக்தி
அறிவாற்றல், துணிச்சல், நிர்வாக திறன், துடிப்பான செயல்பாடு, ஊடகச் சிறப்பு, வெகுஜன உறவு, சமூக அக்கறை ஆகிய மதிப்பீட்டில் டி.டி.வி.தினகரன் முன்னிலை வகிக்கிறார். இதுதான் மக்கள் அவரை விரும்ப காரணம் என கருத்து கணிப்பில் தெரியவந்தது.

தினகரனுக்கே வாய்ப்பு
ஆர்.கே.நகரில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்கப்பட்டதற்கு, டி.டி.வி.தினகரனுக்கு 35.5 சதவீதமும், மருது கணேஷ்க்கு 28.5 சதவீதமும், மதுசூதனனுக்கு 21.3 சதவீதமும், பா.ஜ.க., வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு 1.5 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினகரனுக்கே வெற்றி
டிசம்பர் 13 முதல் 17 வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் படி, ஆர்.கே.நகரில் இன்று வாக்களிப்பதாக இருந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்கப்பட்டதற்கு மக்கள் அளித்த பதில்:
டிடிவி தினகரன் - 37.4%
திமுகவின் மருதுகணேஷ் - 24.3%
அதிமுகவின் மருதுகணேஷ் - 22.1%
நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் -4.8%

பாஜக சரியுமோ
இந்த கருத்துக்கணிப்பில் நோட்டாவைவிட பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் சரிந்துள்ளது. முடிவு செய்யவில்லை என 7 சதவிகிதம் பேர் கருத்து கூறியுள்ளனர்.
பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் - 0.8%
மற்ற வேட்பாளர்கள் - 0.5%
நோட்டா - 3%
முடிவு செய்யவில்லை - 7.1%

தேர்தல் நடக்கட்டும்
தேர்தலுக்கு இன்னும் 3 தினங்களே உள்ளன. இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மக்களை ஈர்க்க ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தேர்தல் ரத்தாகும் என்று பாஜக ஆருடம் கூறி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்பு இன்னும் என்ன கூத்துகள் நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications