நடிகரைக் கண்டதும் திசை திரும்பிய மக்கள்.. ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்!
தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினியிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் சிரித்து பேசி மகிழ்ந்தனர்.
Recommended Video

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினியிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் சிரித்து பேசி மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களை அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.

நேரில் சந்திப்பு
இன்று விமானம் மூலம் சென்னையில் இருந்து அவர் தூத்துக்குடி சென்றார். பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தார்.

செல்பி எடுத்த மக்கள்
அப்போது சிகிச்சை பெறுபவர்களும் அவர்களின் உறவினர்களும் நடிகர் ரஜினிகாந்திடம் சிரித்து பேசி மகிழ்ந்தனர். பலர் நடிகர் ரஜினிகாந்துடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர்.

நிவாரணம்
அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், மேலும் காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கினார்.

நடிகன் என்பதால்..
ரஜினி வருகை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக தூத்துக்குடி புறப்படும் முன்பு தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் தான் நடிகன் என்பதால் நடிகனான தன்னை பார்க்கும் போது தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றார்.

ரஜினி சொன்னபடியே
அவர் சொன்னபடியே தூத்துக்குடி மக்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரித்து பேசி மகிழ்ந்தனர். ரஜினி சொன்னது போலவே தூத்துக்குடி மக்கள் நடிகர் ரஜினியை பார்த்ததும் சில மணி நேரம் கவலைகளை மறந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications