அனுமதியின்றி வெடிபொருள் தயாரித்தவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே அனுமதியின்றி வெடிபொருட்கள் தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் முறையான அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் பட்டாசு தயாரிப்பவர்களை கண்டறிந்து கைது செய்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, துணை கண்காணிப்பாளர் கந்தசாமி, முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், சப்&இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
உத்தரவின்பேரில், இந்த குழுவினர் முத்தையாபுரம் பகுதியில் இன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தையாபுரம் தோப்பு தெருவில் சந்தேகப்படும்படியாக கையில் சாக்குபையுடன் வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த சாக்குபையை சோதனையிட்டபோது அதில், வானவெடி மற்றும் வெடிமருந்துகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் பட்டாணித்தேவர் உத்தரவின்பேரில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்து கோவில் திருவிழா உள்ளிட்டவைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் பட்டாணித்தேவர் வீட்டில் சோதனையிட்டு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான வானவெடிகள், வெடிகுண்டு மற்றும் வெடிகள் தயாரிப்பதற்கான மருந்துபொருட்கள், அச்சு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பாக அழித்தனர்.
கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள இடைச்சேரியை சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை நேரில் பார்வையிட்டதுடன், பிடிபட்ட குற்றவாளி மாரியப்பனிடமும் விசாரணை நடத்தினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications