ஸ்டெர்லைட் ஆலை.. தமிழக அரசின் அரசாணை ரத்தாகுமா? ஆக.9ஆம் தேதி இறுதி விசாரணை!
தமிழக அரசுக்கு எதிரான ஸ்டெர்லைட் வழக்கில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக அரசுக்கு எதிரான ஸ்டெர்லைட் வழக்கில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகம் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த மே மாதம் இதுதொடர்பான போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்13 பேர் கொல்லப்பட்டனர்.

தமிழக அரசு உத்தரவு
இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

வேதாந்தா குழுமம் வழக்கு
தமிழக அரசின் அரசாணையை தொடர்ந்து ஆலை இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கோரிக்கை விடுத்தது.

ஆக.9ல் இறுதி விசாரணை
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது. மேலும் இவ்வழக்கில் ஆகஸ்ட் 9 ல் இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications