மினி பேருந்தில் இரட்டை இலை.... தொடங்கியது சர்ச்சை
சென்னை: சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த மினி பேருந்தில் இரட்டை இலைச் சின்னம் வரையப்பட்டுள்ளதால் அது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மினி பேருந்துகள் தொடக்க விழா முடியும்வரை, இரட்டை இலை சின்னம் தெரியாமல் இருப்பதற்காக அவற்றின் மீது ஊழியர்கள் பேப்பரை ஒட்டிவைத்திருந்தனர். ஆனால், நேற்று பெய்த மழைக்கு அந்த பேருந்துகள் மீது ஒட்டியிருந்த பேப்பர் கிழிந்து விட்டன. இதனால், இப்போது இரட்டை இலை சின்னமும் வெளியில் தெரிந்து விட்டது.

எம்.ஜி.ஆர் நினைவிடம்
எம்.ஜி.ஆர் நினைவில்லத்தின் முகப்பிலும் இரட்டை இலை சின்னம் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மட்டும் ஒருவர் வழக்கு தொடர்ந்தபோது அது பறக்கும் குதிரை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அம்மா குடிநீர்
அதன்பின்னர் அம்மா குடிநீர் பாட்டில்களில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டது இதுவும் சர்ச்சையை கிளப்பியது.

கிளாசிக் பேருந்துகள்
அதே போல முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான திருச்சி ஸ்ரீரங்கத்துக்கும் சென்னைக்கும் இடையே உணவகம், கழிவறை வசதியோடு இயக்கப்படும் கிளாசிக் பேருந்தின் இரு பக்கமும் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டுள்ளது.

மினி பேருந்தில்...
இப்போது மினி பேருந்திலும் இரட்டை இலைச்சின்னம் வரையப்பட்டுள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லையோ?












Click it and Unblock the Notifications