For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துப்பாக்கிச் சூடு சம்பவம்... மாப்பிள்ளை அவர்தான்... ஆனா அவர் போட்ருக்க சட்டை அவரோடதில்லை #மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை அவர்களாகவே ஒப்புக் கொண்ட போதிலும் படையப்பா காமெடி மாதிரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு புதிய விளக்கத்தை தந்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ராமேஸ்வரம் மீனவர்கள் சுடப்பட்டது உண்மைதான் என்றும் ஆனால் அந்த தோட்டா கடலோர காவல் படையினருடையது அல்ல என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் மீன்பிடித்தபோது அவர்களை நோக்கி இந்திய கடலோர காவல் படையினர் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு அதிகாரிகள் மீனவ அமைப்பினரையும், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் ரப்பர் தோட்டா இந்திய கடலோர காவல் படையினருடையது அல்ல என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இவர் கூறியது சரிதான் என்று வனத்துறை அமைச்சரும் ஆமாம் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் பறக்கும் நெட்டிசன்களின் கருத்துகள் இதோ....

சட்டை அவரோடது அல்ல

#மீனவர்கள் சுடப்பட்டது உண்மைதான். ஆனா குண்டு கடலோர காவல் படைக்கு சொந்தமானதல்ல.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மாப்பிள்ளை அவருதான்.
ஆனா சட்டை அவரோடது இல்ல

பாஜக அமைச்சருக்கு ஆமாம் சாமி

வனத்துறை அமைச்சர் அவரோட துறை சம்மந்தமா எதுவும் விளக்கமா அறிக்கை விட மாற்றாரு. ஆனால் பாஜக அமைச்சருக்கு ஆமாம் சாமி போடறாரு.

இன்னொன்னு கிளம்பும்

நாளைக்கு மீனவர்கள் தங்களை தாங்களே சுட்டுட்டாங்கன்னு சொல்லி இன்னொன்னு கிளம்பி வரும் பாருங்க...

இது மட்டும் எப்படி தெரிந்தது

நமக்குதான் எதுமே தெரியாதே இதுமட்டும் எப்படி தெரிந்தது. Doubt

English summary
Netisans shared their comments on Minister Nirmala Sitharaman and Minister Dindigul Srinivasan on the fishermen issue in Rameswaram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X