லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியாக நடித்து மின்வாரிய ஊழியரிடம் லஞ்சம் – இரண்டு பேர் கைது
சேலம்: சேலத்தில் மின் வாரியப் பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி, லஞ்ச ஒழிப்பு போலீசாராக நடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் மின் வாரிய உதவிச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் சேலத்தைச் சேர்ந்த ராமு என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவரிடம் நேற்று காலை அலுவலகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத இருவர் வந்து தங்களை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எனக் கூறினார்.
பின்னர், "உன் மீது நிறைய இலஞ்சப் புகார் உள்ளது. ரூபாய் 10 ஆயிரம் கொடுத்தால் அந்தப் புகாரை சரி செய்துவிடலாம் என்று ராமுவிடம் கூறினர்.
இதையடுத்து, ராமு தன்னிடம் ரூபாய் 2 ஆயிரம்தான் இருக்கிறது என்று கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை கொஞ்ச நேரத்தில் ஏற்பாடு செய்து தருகிறேன் அது வரை அலுவலகத்திலேயே இருங்கள் என்று கூறி விட்டு அருகிலுள்ள ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து, அங்கு வந்த ஓமலூர் போலீஸார், மின்வாரிய ஊழியரிடம் அதிகாரிகள் போல் நடித்து லஞ்சம் கேட்ட இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த சபாபதி, அதிக் அஹமது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரில், ஒருவர் பெட்டிக் கடை வைத்துதிருப்பதும், இன்னொருவர் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications