ஹோட்டலில் மின்சாரம் தாக்கி இருவர் பலி.... மூவர் படுகாயம் - வீடியோ

பழனியில் ஒரு தனியார் உணவகத்தின் கீழே விழுந்த பெயர்ப்பலகையை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி அந்த உணவகத்தின் ஊழியர்கள் இருவர் பலியாகினர்.

Subscribe to Oneindia Tamil

பழனி: பழனியில் ஒரு உணவகத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர்கள் இருவர் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் பேருந்து நிலையத்துக்கு எதிரே செயல்படும் உணவகத்தின் பெயர்ப்பலகை கழன்று விழுந்துள்ளது. அதனைக் கண்ட இரண்டு ஊழியர்கள் மாடியிலேறி அந்த பெயர்ப் பலகையை சரி செய்ய முயன்றனர்ர்.

 In two hotel employees died in electric shock in palani

அப்போது எதிர்பாராதவிதமாக காற்றில் பெயர்ப்பலகை சாய்ந்து அருகில் இருந்த உயர் மின் அழுத்த மின்கம்பியின் மீது விழுந்துள்ளது. இதனை அறியாத ராமு மற்றும் முகமது ஆகிய இரு ஊழியர்கள் அந்த போர்டை அகற்ற முற்பட்டுள்ளனர்.

அப்போது மின்சாரம் தாக்கி ராமு, முகமது இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். மேலும் இவர்களுக்கு உதவிய விஜயகுமார், போஸ் பாண்டி, முருகன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். தற்போது மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+