சென்னை முஸ்லிம் லீக் நிர்வாகி கொலை வழக்கில் மேலும் இருவர் சரண்
சென்னை: முஸ்லீம் லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவர் அக்பர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் சரணடைந்துள்ளனர்.
சென்னைராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை லால்குண்டா பகுதியை சேர்ந்தவர் அக்பர்அலி (33). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்தார். கடந்த மாதம் 21ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். குற்றவாளிகளை அடையாளம் கண்டு தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை.
எனினும் குற்றவாளிகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அக்பர் அலியை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று ராயப்பேட்டை பேகம் தெரு முதல் லேன் பகுதியை சேர்ந்த சகாப்தீன் (37), அவரது நண்பர் மெகபூப் பாஷா (42) ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
ஏற்கனவே அக்பர் அலியை கொலை செய்ததாக இம்ரான்(28), சித்திக்(26), ஜாகீர்(23), ஜான்பாட்ஷா(26) ஆகிய 4 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications