செங்கல்பட்டில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் மாயம்
காஞ்சிபுரம்: தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு செங்கல்பட்டு அருகே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் மாயமானார்கள்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன.
வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

சென்னை, காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை வரை பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளக்காடக மாறியுள்ளது. இரு மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பேர் மாயமானார்கள். சாந்தாம்பாக்கம் அருகே ஆற்று வெள்ளம் ஏற்பட்டது.
இந்த வெள்ளத்தில் சிக்கிய வீட்டு காவலாளிகள் கிஷோர், ரவி ஆகிய இருவர் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி மாயமான இருவரையும் தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications