For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி சிக்கியதால் பயம்.. காமராஜர் பல்கலைக்கழக 2 பேராசிரியர்கள் திடீர் தலைமறைவு!

நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருவதை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக போராசிரியர்கள் 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்-வீடியோ

    விருதுநகர்: நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருவதை தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக போராசிரியர்கள் 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

    அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    5 நாட்கள் காவல்

    5 நாட்கள் காவல்

    இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவியை சிபிசிஐடி போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

    தேவாங்கர் கல்லூரி

    தேவாங்கர் கல்லூரி

    விருதுநகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதேபோல் மற்ற விசாரணை குழுவினர் தேவாங்கர் கல்லூரிக்கு சென்று முதல்வர் பாண்டியராஜன் மற்றும் பேராசிரியர்களிடம் 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

    ரகசிய விசாரணை

    ரகசிய விசாரணை

    இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட 4 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. நிர்மலாதேவி கொடுத்த வாக்குமூலத்தில், மாணவிகளிடம் தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் செல்போனில் பேச, காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 2 உதவி பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

    பேராசிரியர்கள் தலைமறைவு

    பேராசிரியர்கள் தலைமறைவு

    அதன்பேரில், பல்கலைக்கழகத்துக்கு விசாரணைக்கு சென்ற சி.பி.சி.ஐ.டி. குழுவினர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதோடு, நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 உதவி பேராசிரியர்கள் பற்றி விசாரித்த போது அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.

    கைது செய்ய தீவிரம்

    கைது செய்ய தீவிரம்

    நிர்மலாதேவி குறிப்பிட்ட 2 பல்கலைக்கழக உதவி பேராசிரியர்களும் தலைமறைவாகி உள்ளதில் இருந்தே அவர்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளார். அவர்களை கைது செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    English summary
    Two of the Madurai Kamarajar University faculty have been absconding since the CBCID police are conducting the investigation into Nirmala Devi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X