For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீனவர்களுக்கு மன்னிப்பு விவகாரம்- இந்திய- இலங்கை அரசுகளின் நாடகம்: வைகோ கடும் சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களுக்கு ராஜபக்சே மன்னிப்பு அளிப்பதாக கூறுவது என்பது இந்திய- இலங்கை அரசுகளின் நாடகம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு இன்று வைகோ சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் மதிமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

உலகத் தமிழ் மாநாடு

உலகத் தமிழ் மாநாடு

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தலைமை வகித்தார்.

பொதுவாக்கெடுப்பு

பொதுவாக்கெடுப்பு

இந்த மாநாட்டில் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் உலகம் முழுவதும் வாழுகிற ஈழத் தமிழர்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உலகத் தமிழர் செயலகம்

உலகத் தமிழர் செயலகம்

மலேசியாவை தலைமையிடமாக கொண்டு உலக தமிழர்கள் செயலகம் செயல்பட இருக்கிறது. இதற்கு பினாங்கு துணை முதல்வர் ராமசாமி தலைவராக இருப்பார்.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

மீனவர் தூக்கு- மன்னிப்பு

மீனவர் தூக்கு- மன்னிப்பு

பின்னர் இலங்கையில் தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனையை ராஜபக்சே ரத்து செய்வார் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ராஜபக்சே சூழ்ச்சி

ராஜபக்சே சூழ்ச்சி

இதற்கு பதிலளித்த வைகோ, தமிழ் இன மக்களைக் கொன்று குவித்த கொலையாளி ராஜபக்சேவின் திட்டமிட்ட படுபயங்கரமான உள்நோக்கம் கொண்ட சூழ்ச்சி இது.

நாடகத்துக்கு இந்தியாவும் உடந்தை

நாடகத்துக்கு இந்தியாவும் உடந்தை

தமிழக மீனவர்களின் தூக்கை ரத்து செய்யுங்கள் என்று இந்தியா கேட்குமாம்.. உடனே இலங்கை அதிபரும் தூக்கு தண்டனையை ரத்து செய்வதாக அறிவிப்பாராம். இந்த திட்டமிட்ட நாடகத்துக்கு இந்தியாவும் உடந்தை என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

நல்லவராக காட்டிக் கொள்ள..

நல்லவராக காட்டிக் கொள்ள..

இதற்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து போதை பொருள் கடத்தி வந்தவர்களுக்கு கூட தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. அப்பாவியான 5 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.இது தமிழர்களிடையே ராஜபக்சே தன்னை நல்லவராக காட்டிக் கொள்ளும் அப்பட்டமான நாடகம் என்றார்.

கூட்டணியில் இருந்து விலகல்?

கூட்டணியில் இருந்து விலகல்?

பாஜக அரசை விமர்சிப்பதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, நாங்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் எங்கள் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்றார்.

English summary
Reacting on the reports of Sri Lankan President Mahinda Rajapakse's willingness to pardon the 5 Tamil Fisherman on death row, MDMK chief Vaiko on Wednesday alleged that Rajapakse is doing a drama with connivance of the Indian Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X