திமுக தலைவர் கருணாநிதியை மீண்டும் சந்தித்த வைகோ
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் மீண்டும் சந்தித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட பின்னர் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் வைகோ. அதன்பிறகு திமுக மதிமுக இடையே அறிவிக்கப்படாத பனிப்போரே நிலவியது. மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் பலர் திமுகவில் இணைந்தனர்.

இதனால் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் வைகோ. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து தனி கூட்டணி அமைத்தார் வைகோ. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கருணாநிதி தனது கனவில் வருகிறார் என்று கூறி கருணாநிதியை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தனது கையை பற்றிக் கொண்டதாக மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் வைகோ. இந்நிலையில் அவருக்கு முரசொலி பவள விழா பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து அவர் கலந்து கொண்டார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக வைகோ பிரசாரம் செய்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மதிமுக சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று வைகோ அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை வைகோ மீண்டும் சந்தித்து நலம் விசாரித்தார். திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வைகோ தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications