காவிரிக்காக தீக்குளித்த வைகோ உறவினர் சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தீக்குளித்த வைகோ உறவினர் சரவணன் சுரேஷ்

  மதுரை: காவிரி வாரியம் அமைக்கக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விருதுநகரில் தீக்குளித்த வைகோவின் உறவினர் சரவணன் சுரேஷ் சிகிச்சை பலனின்றி மதுரையில் பலியாகினார்.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

  இந்நிலையில் காவிரி உரிமை மீட்பு நடைப்பயணத்தை வைகோ தொடங்கி வைத்தார். தமிழகத்தில் காவிரி போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.

  அரசியலில் தீவிரம்

  அரசியலில் தீவிரம்

  வைகோவின் மனைவி ரேணுகாதேவியின் சகோதரர் ராமானுஜத்தின் மகன் சரவணன் சுரேஷ். இவர் வைகோவுடன் இணைந்து அரசியல் ஈடுபட்டு வந்தார். காவிரி விவகாரம் குறித்தும் நீட் தேர்வுக்கு எதிர்த்தும் இவர் தொடர் போராட்டங்களில் இருந்தார்.

  வைகோவிடம் வருத்தம்

  வைகோவிடம் வருத்தம்

  இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வைகோ பங்கு வாங்கிவிட்டதாக குறிப்பிட்டு போடப்பட்ட மீம்ஸ் குறித்து சரவணன் சுரேஷ், வைகோவிடம் வருந்தியுள்ளார். அதற்கு அவர் சரவணனை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்.

  உடல் முழுவதும் கருகியது

  உடல் முழுவதும் கருகியது

  சோர்வாகவே இருந்த சுரேஷ் நேற்று காலை திடீரென நடைப்பயிற்சி மேற்கொள்வதால் விருதுநகர் விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். அங்கு யாரும் எதிர்பாராதவகையில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

  மதுரை தனியார் மருத்துவமனை

  மதுரை தனியார் மருத்துவமனை

  இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயம் அடைந்த சரவணன் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  தொண்டர் தீக்குளிப்பு

  தொண்டர் தீக்குளிப்பு

  இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோவின் தொண்டர் ஒருவர் தீக்குளித்து இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Vaiko's relative who self immolates himself died in Madurai demands to form Cauvery board and stop Neet exam.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற