Vaiko: குடும்ப வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் வேட்பாளராகலாமா? வைகோ கேள்வி! யாரை சொல்கிறார்?

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வில் ஒழுக்கமான குடும்ப வாழ்க்கையை அடிப்படைத் தகுதியாகக் கொள்ள வேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ, வலியுறுத்தியுள்ளார்.

திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக அவர் கூறியிருப்பதாவது: ஒழுக்கமான குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள் அரசியல் வேட்பாளராக தகுதியற்றவர்கள்.

vaiko mdmk

குடும்ப ஒழுக்கம் இல்லாதவர்களை வேட்பாளராக நிறுத்துவது சரியா? அமெரிக்காவில் தன் மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

இத்தனைக்கு அமெரிக்காவில் ஒரு permissive society (தனி நபர் உரிமை, பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் சுதந்திரம், விவாகரத்து, வாழ்க்கை முறை தேர்வு) இருக்கிறது. அங்கு பிடித்தால் சேர்ந்து வாழ்வார்கள். இல்லாவிட்டால் விவாகரத்து பெற்றுக் கொள்வார்கள், அல்லது பிரிந்து விடுவார்கள்.

கடந்த 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு போன போது ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கும் குடியரசு கட்சியின் தலைமையகத்திற்கும் சென்றிருந்தேன். அங்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரிசையாக வந்து நின்றார்கள்.

ஒவ்வொருவரும் 3 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும். அங்கு தொகுதிக்குள்பட்ட வாக்காளர்கள் இருப்பார்கள். கொடுத்த 3 நிமிடத்தில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் தெரியுமா? "நான் ஒரு நல்ல குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

நான் என் மனைவி, மக்களுடன் ஒழுங்கான ஒரு இல்லற வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்." இதை மட்டும்தான் பேசுகிறார்கள். அப்படியென்றால் வாக்காளர்கள் ஒழுக்கமான வாழ்க்கையை வேட்பாளர்கள் வாழ்கிறார்களா என்பதைத்தான் முக்கியமாக பார்க்கிறார்கள்.

அதிபர் தேர்தல் வேட்பாளராக போகிறவர்கள் என சொல்லும் 4 பேர் , அவர்களின் பெயர்கள் நினைவில்லை. அவர்கள் 4 பேரும், ஒழுக்கமற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாக ஆதாரம் காட்டப்பட்டதை அடுத்து அவர்கள் அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பையே இழந்தார்கள்.

அப்படிப்பட்ட சமூகத்தில் கூட குடும்பத்தை ஒழுக்கமாக நடத்துகிறவர்கள்தான் நாட்டின் உயர் பதவிக்கு வர வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடற்ற நாட்டிலேயே குடும்ப ஒழுக்கம் முதன்மையாக பார்க்கப்படுகிறது. கற்பையும் மானத்தையும் உயர்வான பண்பாடாக வகுத்த தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இருக்கிறதா? 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ஒழுக்கம் குறித்த மனப்பான்மை தமிழகத்தில் சிதைந்து வருகிறது என குறிப்பிட்டார்.

ஒழுக்கம் குறித்து வைகோ சொன்ன கருத்துகள் வைரலாகி வருகின்றன. அவர் யாரை மனதில் வைத்து சொன்னார் என தெரியவில்லை. ஒரு வேளை அவரது கட்சியில் வேட்பாளர்களை அப்படித்தான் தேர்வு செய்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அது போல் 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டியிட போகிறது. இந்த நிலையில் வேட்பாளர் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என அவர் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+