For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமாவளவனை தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிப்பதா? தமிழிசைக்கு வன்னியரசு கடும் கண்டனம்!

விமர்சனங்களை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழிசைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: விமர்சனங்களை அரசியல் ரீதியாக மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமே தவிர தனிப்பட்ட தாக்குதல்கள் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு பதிலடி கொடுத்துள்ளார்.

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்த வசனங்களுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் விஜய்யை தங்கள் கட்சிக்குள் வளைத்து போடவே பாஜக இதுபோல் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கட்டப் பஞ்சாயத்து செய்து இடத்தை வளைத்துப் போடுகிறவர்.

 கட்டப்பஞ்சாயத்து

கட்டப்பஞ்சாயத்து

அவர்கள்தான் பஞ்சாயத்து, கட்டப்பஞ்சாயத்து செய்து இடங்களை வளைத்து போடுபவர்கள் என்றார். தனிநபர் விமர்சனமாக பார்க்கப்பட்ட தமிழிசையின் இந்த கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தனது பதிலை வீடியோவாக பதிவிட்டு அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

 அச்சுறுத்தும் பாஜக

அச்சுறுத்தும் பாஜக

அந்த வீடியோவில் அவர் கூறுகையில், நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசுக்கு எதிராக விமர்சனங்களை பொருத்துக் கொள்ள முடியாத தமிழக பாஜக தலைவர்கள் தமிழக திரைப்படத் துறையையே அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது.

 திருமாவளவன் பதில்

திருமாவளவன் பதில்

இதுகுறித்து எங்கள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஊடகவியலாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நடிகர்களை வளைத்து போட்டுக் கொண்டு கட்சி நடத்த பார்க்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். இதற்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல முடியாத தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அருவருக்கத்தக்க, கீழ்த்தரமான, தனி நபர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 முன்னணி அமைப்பு விசிக

முன்னணி அமைப்பு விசிக

இந்துத்துவ கொள்கையை எதிர்ப்பதில், பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதில், பாஜகவின் மக்கள் விரோத செயல்களை எதிர்ப்பதில் தமிழகத்தில் சமரசம் இல்லாமல் போராடி வரும் முன்னணி அமைப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி விளங்குகிறது.

 தமிழிசைக்கு கண்டனம்

தமிழிசைக்கு கண்டனம்

இதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் தமிழகத்தில் எங்கள் கட்சியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சகிக்க முடியாமல் எரிச்சலில் காழ்ப்புணர்ச்சியில் தமிழிசை பேசியுள்ளார். இது வேதனை அளிக்கிறது. நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார் அவர்.

வன்னியரசு பதிலடி வீடியோ:

English summary
Viduthalai Chiruthaigal Katchi's spokes person Vanniyarasu says that Tamilisai should handle criticism in a political way only, not in personal criticism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X