கர்நாடகத்தின் லிங்காயத்தும், தமிழகத்தின் வீர சைவமும் வேறு வேறு!
வீர சைவ மதமும், லிங்காயத் மதமும் வெவ்வேறானவை என்று நமது வாசகர் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அண்மையில் கர்நாடக அரசு அறிவித்த லிங்காயத் மதமும், தமிழகத்தின் வீர சைவமும் வேறு வேறு என்று நமது வாசகர் ரா.கண்ணப்பன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஒரு சிறு விளக்க கட்டுரை உங்கள் பார்வைக்கு:
அண்மையில் லிங்காயத்தை தனி மதமாக அறிவித்து கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த செய்தியை பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் வீர சைவ லிங்காயத் மதம் என்றே வெளியிட்டன. இது அடிப்படையிலேயே தவறானது ஆகும். லிங்காயத் மதமானது காஷ்மீர சைவத்தை அடிப்படையாகக் கொண்டு பசுவேஸ்வரால் உருவாக்கப்பட்ட மதம்.

உருவ வழிபாட்டை உறுதியாக மறுக்கும் மதம். அருஉருவாக காட்சியளிக்கும் சிவலிங்கத்தை மட்டுமே பூஜிக்கும் மதம். அதனால்தான் இந்த மதத்துக்கு லிங்காயத் என்று பெயர்.
இது கர்நாடகாவில் தோன்றிய மதம். ஆனால் வீரசைவம் என்பது தமிழ்நாட்டில் தோன்றிய மதம். லிங்காயத் மதம் தோன்றுவதற்கு முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுப் பண்டார குல சான்றோர்களால் உருவாக்கப்பட்ட மதம்.
இராஜராஜசோழ அரசுக்கு முன்னமே உருவான மதம், இந்த இரண்டு மதங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ஆகம, அர்ச்சகவிதிகளுக்கு உட்படாதவை.
அவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்கும் மதங்களாகும். ஆனால் வீரசைவம் என்பது உருவ வழிபாட்டையோ, பல தெய்வ வழிபாட்டையோ மறுக்கும் மதம் அல்ல.
இரண்டுக்கும் இருக்கும் இந்த வேறுபாடு தெரியாமலேயே ஊடகங்கள் இந்த இரண்டும் தங்களும் ஒன்றுபோல் தொடர்ந்து எழுதிவருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும் என்பது ரா கண்ணன் தரும் விளக்கமாகும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications