வேலூர் கொலையில் திருப்பம்.. பெற்றோர், தங்கையை கொன்றது மகனே.. காரணம் காதல்!
வேலூர்: வேலூரில் மின்வாரிய துறை அதிகாரி, மனைவி, மகள் கொலை செய்யப்பட்டதற்கு அவரின் மகனே காரணம் என்பது தெரிந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரை கிராமத்தில் மின்வாரிய துறை அதிகாரி மோகன்(52), அவரது மனைவி ராஜேஸ்வரி(47), மகள் சுகன்யா(23) ஆகியோர் வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

படுகாயம் அடைந்து மயக்க நிலையில் கிடந்த மோகனின் மகன் தமிழரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயக்கம் தெளிந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதிகாலை 3.30 மணிக்கு சிறுநீர் கழிக்க சென்ற தன்னை யாரோ கத்தியால் குத்தியதாகவும், உடனே தான் மயங்கிவிட்டதாகவும் தமிழரசன் தெரிவித்துள்ளார். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்ற மோகன் காலை 6 மணிக்கு தான் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை 7.30 மணிக்கு பால்காரர் வந்து அழைத்தும் யாரும் வராததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தான் கொலை நடந்தது தெரிய வந்தது.
தமிழரசன் சொல்வதுபடி பார்த்தால் கொலையாளி 3.30 மணிநேரம் காத்திருக்க வேண்டும். அதனால் தமிழரசனே கொலை செய்துவிட்டு நாடகமாடுகிறாரோ என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் மோகனுக்கும் அவரது பங்காளி ஒருவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இதில் அவர் உங்களை குடும்பத்தோடு கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் போலீசார் தமிழரசனிடம் விசாரித்தபோது தனது தாய், தந்தை, தங்கையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். டிப்ளமோ படித்துள்ள தமிழரசன் ஓசூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவர் தன்னுடன் பணியாற்றும் வேறு சமூகத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்துள்ளார்.
காதலியின் அவசர தேவைக்கு ரூ.2 லட்சம் ரொக்கம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சுகன்யா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த காதலுக்கு தமிழரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தனது காதலை காட்டிக் கொடுத்த தங்கையை தமிழரசன் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றார். அவரை காப்பாற்ற வந்த தாயையும் குத்திக் கொன்றார். காலையில் வீட்டிற்கு வந்த தந்தையையும் கொன்றுவிட்டு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்டு யாரோ மர்ம ஆசாமிகள் கொலை செய்ததாக நாடகமாடியுள்ளார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications