வைரல்! போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து.. மதுபோதையில் சரமாரி அர்ச்சனை.. ஜாதியை சொல்லி வம்பிழுத்த வழக்கறிஞர்

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை: சீர்காழி காவல் நிலையத்திற்கு மதுபோதையில் வந்து காவலர்களைத் தரக்குறைவாகப் பேசி ரகளையில் ஈடுபடும் வழக்கறிஞரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    வைரல்! போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து.. மதுபோதையில் சரமாரி அர்ச்சனை.. ஜாதியை சொல்லி வம்பிழுத்த வழக்கறிஞர்

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ், இவர் பார் கவுன்சில் செயலாளராகவும் உள்ளார்.

    இவர் மதுபோதையில் காவல்நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலைய ஆய்வாளரைத் தகாத வார்த்தைகளைக் கூறி திட்டியும் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     நடந்தது என்ன?

    நடந்தது என்ன?

    சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது வழக்கறிஞர் ராஜேஷ் மதுபோதையில் காரை ஓட்டிச் சென்று தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் மீது புகார் அளித்துள்ளனர்.

     ஆபாச பேச்சு

    ஆபாச பேச்சு

    இந்த புகார் குறித்த விசாரணைக்கு வந்த ராஜேஷ் மதுபோதையில் காவல்நிலையத்திற்கு உள்ளே சென்று ஆய்வாளர் மற்றும் எஸ்.பி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அங்குள்ள காவலர்களை 'நீ யார் உன்னை என்ன செய்கிறேன் பார்' என மிரட்டியும் உள்ளார். அதுமட்டுமின்றி மற்ற சாதியினரைத் தரக்குறைவாகப் பேசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

     வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    காவலர்களை வம்பிழுத்தது மட்டுமில்லாமல், விபத்தை ஏற்படுத்திய காரையும் எடுத்துச் சென்று விட்டதாகக் காவலுக்கு நின்ற போலீஸார் தெரிவித்து உள்ளனர். மதுபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், விசாரணைக்கு வந்த இடத்தில் காவலர்களைத் தரக்குறைவாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

     போலீஸ் நடவடிக்கை

    போலீஸ் நடவடிக்கை

    சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய வழக்கறிஞரே, இப்படி மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பிய உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+