இதுனாலதான் புதுப்புது கட்சியா வருது.. விஜய் கட்சி பற்றி விஜய பிரபாகரன் சூசக பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் புதுப்புது கட்சிகளும், தலைவர்களும் உருவாகி வருகின்றனர் என விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கி இருப்பதை சூசகமாகக் குறிப்பிட்டு பேசி உள்ளார் விஜய பிரபாகரன்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில், தேமுதிகவின் 20ஆம் ஆண்டு துவக்க விழாவையும், விஜயகாந்த்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.

Vijay Prabhakaran indirectly mentioned Vijay s political party TVK

பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், "வருங்காலத்தில் நம்ம எல்லாரும் பார்க்கப் போகிறோம். 2005 இந்தக் கட்சியை கேப்டன் விஜயகாந்த் ஆரம்பிக்கும் போது, அந்த மாநாட்டில் 35 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். அப்படிப்பட்ட கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

எல்லாருமே நம்மை கிண்டலும், கேலியும் செய்கிறார்கள். தேமுதிக என்பது முன்பு போல் இல்லை, ஒரு சதவீத வாக்கு வாங்கி மட்டுமே வைத்துள்ளது என மக்களிடம் தவறான தகவலைப் பரப்புகின்றனர். ஆனால், இன்றைக்கும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு தினமும் பத்தாயிரம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் எப்போதும் தனக்கு பொறுப்புகள் வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்தால் போதும் எனக் கூறுவார். தற்போது நாங்களும் அதே நிலைப்பாட்டில் உள்ளோம். தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்குத் தேவையான நல்லதைச் செய்யவில்லை.

விஜயகாந்த் மறைந்த பிறகு தேமுதிக என்ற கட்சி காணாமல் போய்விடும் என விமர்சனம் செய்தார்கள். அப்படியானால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளை ஆரம்பித்தவர்கள் மறைந்த பிறகு இன்றளவும் செயல்பட்டு வருகிறதே எப்படி?

அவர்களுக்கும் நமக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது. அவர்களிடம் பணம் உள்ளது, நம்மிடம் இல்லை, அவ்வளவுதான் வித்தியாசம். தமிழகத்தில் தற்போது ஆளும் அரசு பொதுமக்களுக்குத் தேவையான நல்லதைச் செய்யவில்லை. அதனால் தான் புதுப்புது கட்சிகளும், தலைவர்களும் உருவாகி வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா கார் ரேஸ் நடத்தினார். குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் இருசக்கர வாகனத்திலும், பிற வாகனங்களிலும் சென்றால் பொதுமக்களுக்கு ஓவர் ஸ்பீட் என அபராதம் விதிக்கும் அதே அரசு, சென்னையில் பார்முலா ரேஸ் என கார் பந்தயம் நடத்தி அதன் மூலமாக மக்கள் பணத்தில் 400 - 500 கோடி ரூபாய் வரை செலவு செய்து வீணாக்கி உள்ளது. யார் அப்பன் வீட்டு காசை செலவு செய்தீர்கள்" எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+