For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் வீட்டாரின் அசரடிக்கும் கண்டிசன்கள்... கலங்கும் மாப்பிள்ளைகள்!! #நீயா நானா

விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பெண்ணை பெற்ற பெற்றோர்கள் போட்ட கண்டிசன்களைப் பார்த்து கலங்கித்தான் போனார்கள் இளைஞர்கள்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உங்களுக்கு என்னம்மா? பையனை பெற்ற மகராசி என்று சொன்ன காலம் போய், இப்போது உனக்கென்னம்மா மகாலட்சுமியை பெற்ற மகராசி என்று சொல்லும் காலம் வந்து விட்டது.

காரணம் இன்றைக்கு ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும் பெண் வீட்டார் போடும் ஏகப்பட்ட கன்டிசன்கள்.

அருப்புக்கோட்டை பக்கமும் கோவை பக்கமும் பெண் வீட்டார்தான் மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணை கேட்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பையனை பெற்றவர்கள்தான் லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைக்க வேண்டியுள்ளது.

ஆண்களுக்கு சமமாக பெண்களும் படித்து சம்பாதிப்பதால் அதற்கேற்ப மாப்பிள்ளைகளை தேடுகின்றனர். இதனால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு திருமணம் நடைபெறுவது கடும் சிரமமாக உள்ளது.

இதனை உணர்த்தும் வகையில் இருந்தது நேற்றைய நீனா நானா நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி பல இளைஞர்களை கலங்கடித்துள்ளது. டுவிட்டரில் பல இளைஞர்கள் குமுறியுள்ளனர்.

போங்கடி நீங்களும் உங்க கண்டிசனும்

போங்கடி நீங்களும் உங்க கண்டிசனும் என்று கூறியுள்ளார் ஒரு இளைஞர்.

பேச்சிலரே மேல்

பெண்களின் கண்டிசன்களைப் பார்த்தால் பேசமா பேச்சிலராக இருந்து விடலாம் என்று சொல்கிறார் ஒரு இளைஞர்.

நிபந்தனை வேண்டாம்

பொண்ணுங்க வைக்கிற நிபந்தனை எல்லாம் சரிதான் இதையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா உங்களுக்கு கல்யாணமே ஆகாது என்று கேட்கிறார் ஒருவர்.

உண்மையான லவ்

உண்மையான லவ்

ஏன் இவ்வளோ நிபந்தனை... கல்யாணம் பண்ண நல்ல மனசும் உண்மையான லவ்வும் இருந்தா போதாதா என்று கேட்கிறார் ஒரு இளைஞர்.

நாங்க எங்கே போறது

150000 சம்பளம் இருந்தா தான் பொண்ண கட்டி வைப்பங்கலாம். 10000 சம்பளம் வாங்கற நாங்க எங்க போறது... என்று கவலையோடு கேட்கிறார் ஒரு இளைஞர்.

English summary
Neeya Naana girls family vs boys family debate marrige demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X