விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பார்த்தசாரதி கைது: விஜயகாந்த் கண்டனம்
சென்னை: சென்னையில் பள்ளி கட்டிட திறப்பு விழா தொடர்பான பிரச்சினையில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகக்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தேமுதிக உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக கூறி வருகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரினால், தேமுதிகவைச் சார்ந்த விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ப.பார்த்தசாரதி எம்.எல்.ஏ வை கைதுசெய்தது எந்த விதத்தில் நியாயம்?

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா பள்ளியில் பதினைந்து வகுப்பறை கட்டிடம் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்பணி பொதுப்பணித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வகுப்பறை கட்டிடத்தை பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கும் விழா இன்று 29.10.2014 காலை 10 மணியளவில் நடைபெற இருந்தது. அதற்காக சட்டமன்ற உறுப்பினர் ப.பார்த்தசாரதி அவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும் பள்ளிக்கு சென்ற போது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
விருகம்பாக்கம் தொகுதி மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி, பள்ளியில் நடைபெறுகின்ற நல்லது, கெட்டது அனைத்தையும் கேட்பதற்கு அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கு பொறுப்பு உண்டு, உரிமை உண்டு, கடமையும் உண்டு.
ஆளும் அதிமுக அரசின் கைப்பாவையாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியையும், இதில் உள்ள உண்மைகளை சிறிதும் கண்டு கொள்ளாமல் கைது செய்துள்ள காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ப.பார்த்தசாரதி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என[வும் விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications