மோடியை வேடிக்கை பார்க்க வந்த விஜயகாந்த் குடும்பம்!
சேலம்: கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கையில் நேற்றைய சேலம் மோடி கூட்டம் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறிப் போனது - குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு.
மோடியுடன், விஜயகாந்த் கலந்து கொண்ட முதல் அரசியல் கூட்டம் என்பதாலும், ஒரு தேசிய தலைவருடன் பொது மேடையல் விஜயகாந்த் கலந்து கொண்ட முதல் கூட்டம் என்பதாலும் விஜயகாந்த் குடும்பமே பூரித்துப் போய்க் காணப்பட்டது.
இந்தப் பூரிப்பின் காரணமாக, நேற்று நடந்த சேலம் கூட்டத்திற்கு விஜயகாந்த் குடும்பத்தினர் திரண்டு வந்திருந்தனர்.

மச்சான் சுதீஷ்
சேலம் தொகுதியில் விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் போட்டியிடுகிறார். கடுமையாகப் போராடி இந்த தொகுதியை மச்சானுக்காக வாங்கிய கதை அனைவரும் அறிந்ததுதான்.

சுதீஷுக்காக பிரசாரம்
இந்தத் தொகுதியில்தான் நேற்று மோடி பிரசாரம் செய்தார்.

ஒரே மேடையில் 14 பேரும்
இந்தக் கூட்டத்தின்போது தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் 14 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நிற்க வைத்தார் விஜயகாந்த்.

மனைவி - மகள்கள்
இந்தப் பிரசாரக் கூட்டத்தைக் காணவும், மோடியைப் பார்க்கவும் விஜயகாந்த் குடும்பத்தினர் திரண்டு வந்தனர். சுதீஷின் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் அதில் அடக்கம்.

விஜயகாந்த் மகன்
அதேபோல விஜயகாந்த்தின் மூத்த மகனும் வேடிக்கை பார்க்க வந்திருந்தார்.

பத்திரிக்கையாளர்களுக்குப் பக்கத்தில்
விஜயகாந்த் குடும்பத்தினர் அமர பத்திரிக்கையாளர்களுக்கே அருகிலேயே சீட் போட்டிருந்தனர். அங்கு விஜயகாந்த் மகன், சுதீஷின் மனைவி மகள்கள் உள்ளிட்டோர் கட்சி அடையாள அட்டையுடன் அமர்ந்து மோடி பேச்சையும், விஜயகாந்த்தையும் ரசித்து மகிழ்ந்தனர்.

கட்சி சேலையில் பிரேமலதா
கட்சி சேலையில் பிரேமலதா விஜயகாந்த் மோடியுடன் மேடையில் அமர்ந்திருந்தார். சுதீஷின் மனைவி பட்டுப் புடவையில் வந்திருந்தார்.

திமுகவுக்குப் பிறகு
திமுகவில்தான் கருணாநிதி, ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு குடும்பத்தினர் வந்து ரசிப்பார்கள். தற்போது அந்த வரிசையில் தேமுதிக குடும்பமும் இணைந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications