புதுச்சேரியில் இருபிரிவினரிடையே மோதல்.. போலீஸ் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி, பதற்றம்
புதுச்சேரியில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.
Recommended Video

புதுச்சேரி: காலாப்பட்டில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். மேலும் தடியடி நடத்தியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள ரசாயண தொழிற்சாலை விரிவாக்கப் பணி தொடர்பாக இன்று கருத்துக்கேட்பு கூட்டம் ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

அப்போது ஒரு பிரிவினர் தொழிற்சாலை விரிவாக்கத்துக்க ஆதரவு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போதும் கூட்டத்தினர் கலையாததால் போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
தொடர்ந்து அவர்கள் சாலையில் திரண்டு மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.
இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி என அதிரடி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications