For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் 2 ரிசல்ட்: 100 சதவீதம் தேர்ச்சி பெறாத அரசு பள்ளிகள் இவைதான்!!

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 292 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் வெளியான பிளஸ் 2 தேர்ச்சி முடிவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு அரசு பள்ளி கூட 100 சதவீத தேர்ச்சியை எட்டவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31ம் தேதி முடிவடைந்தது. இரு மாநிலங்களிலும் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 பேர் தேர்வு எழுதினார்கள்.

Virudhunagar district registered highest 100 %pass result.

மாணவர்களை விட 62,843 மாணவிகள் கூடுதலாக தேர்வு எழுதினார்கள். பள்ளி மாணவர்களைத் தவிர தனித்தேர்வர்களும் எழுதினார்கள். மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. அதன்படி தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம், 92.1% ஆக உள்ளது. அதில் தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களில் கடலூர் மாவட்டம் குறைந்த தேர்ச்சி விகிதத்தையும், விருதுநகர் மாவட்டம் அதிக தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளது.

மேலும் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 292 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு அரசு பள்ளி கூட 100 சதவீத தேர்ச்சியை எட்டவில்லை.

மாவட்டவாரியாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் பட்டியல்:

1.விருதுநகர் -28
2.ராமநாதபுரம் - 23
3.ஈரோடு - 23
4.நாமக்கல் -16
5.தூத்துக்குடி - 16
6.சிவகங்கை - 15
7.நெல்லை - 14
8.தேனி - 14
9.சேலம் - 14
10.திருச்சி - 14
11.கோவை -13
12.கரூர் -13
13.கன்னியாகுமரி -12
14.திருப்பூர் -11
15.புதுக்கோட்டை - 9
16.மதுரை-9
17.தருமபுரி -7
18.திருவண்ணாமலை-7
19.தஞ்சாவூர்- 7
20.உதகை -6
21.விழுப்புரம் -4
22.திண்டுக்கல்-4
23.வேலூர் -3
24.திருவாரூர்-2
25.கிருஷ்ணகிரி-2
26.அரியலூர் -2
27.பெரம்பலூர் -2
28.நாகைப்பட்டினம் -1
29.கடலூர் -1
30.சென்னை - 0
31.காஞ்சிபுரம் -0
32.திருவள்ளூர் -0

English summary
chennai, kanchipuram, thiruvallur districts government school's very poor in Plus 2 result
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X