For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி வருகிறார் விஜயகாந்த்.. பாஸ்கர் என்ற பெயரில் வேட்பாளர் இருந்தால் சூதானமா இருந்துக்குங்கப்பா!

Google Oneindia Tamil News

சென்னை: ஏற்காடு இடைத் தேர்தலை கணக்கிலேயே சேர்க்கவில்லை தேமுதிக என்று தெரிகிறது. மாறாக டெல்லி சட்டசபைத் தேர்தலில்தான் படு தீவிர கவனம் செலுத்தி வருகிறார் விஜயகாந்த். அந்தத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஒரு வாரம் டெல்லியில் முகாமிட்டு பிரசாரம் செய்யப் போகிறாராம்.

மனைவி பிரேமலதா மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் டெல்லியில் தனது கட்சி போட்டியிடும் தொகுதிகளை முழுமையாக வலம் வந்து பிரசாரம் செய்யும் திட்டத்தில் உள்ளாராம் விஜயகாந்த்.

இதற்காக 27ம் தேதி விஜயகாந்த் மற்றும் தலைவர்கள் டெல்லி பயணமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக

முதல் முறையாக

டெல்லி சட்டசபைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறது தேமுதிக. அங்கு 11 தொகுதிகளில் அது போட்டியிடுகிறது.

தி்முக, அதிமுக கூட போட்டியிட்டதில்லை

தி்முக, அதிமுக கூட போட்டியிட்டதில்லை

தமிழகத்தைச் சேர்ந்த எந்தக் கட்சியும் இதுவரை டெல்லி தேர்தலில் போட்டியிட்டதில்லை. ஏன், திமுக, அதிமுக போன்ற ஜாம்பவான்களே போட்டியிட்டதில்லை. அப்படி இருக்கையில் முதல் முறையாக டெல்லி களத்தில் கால் வைத்துள்ளது தேமுதிக.

முதல் கூட்டம் ஓவர்

முதல் கூட்டம் ஓவர்

ஏற்கனவே மனைவி பிரேமலதாவுடன் அங்கு முதல் பொதுக் கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டார் விஜயகாந்த். அதன் பின்னர் தான் வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார்.

11 வேட்பாளர்களும் ரெடி

11 வேட்பாளர்களும் ரெடி

தேமுதிகவின் 11 வேட்பாளர்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து தேமுதிக தீவிரப் பிரசாரத்தில் இறங்கக் காத்திருக்கிறது.

டெல்லிக்கு இடம் பெயரும் தமிழக தேமுதிக

டெல்லிக்கு இடம் பெயரும் தமிழக தேமுதிக

தமிழக தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் என அத்தனை பேரையும் டெல்லிக்குப் படையெடுக்கவும் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளாராம்.

அத்தனை பேரும் சேர்ந்து பிரசாரம் செய்யுங்க

அத்தனை பேரும் சேர்ந்து பிரசாரம் செய்யுங்க

அனைவரும் 11 தொகுதிகளிலும் தீவிரமாக வலம் வந்து பிரசாரத்தில் பங்கேற்குமாறும் தேமுதிகவின் பலத்தை டெல்லியில் வைத்து நாட்டுக்கு உணர்த்த வேண்டும் என்றும் உத்தரவு போயுள்ளதாம்.

'பாஸ்கர்' என்ற பெயரில் வேட்பாளர் யாராவது இருந்தா கொஞ்சம் கவனமா இருந்துக்கங்கப்பா...!

English summary
DMDK president Vjayakanth is all set to campaign in Delhi assembly polls for one week with his wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X