கேரளாவை போல் தமிழக பள்ளிகளில் 'தண்ணீர் பெல்'... அமைச்சர் செங்கோட்டையன் சூப்பர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: கேரளாவைப் போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் 10 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஒதுக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் பள்ளி மாணவ மாணவிகள் தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தண்ணீர் குடிப்பதற்கு என்றே பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள். இது அந்த மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாணவர்கள் குடிநீர் அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டத்தை கர்நாடகாஅரசும் பின்பற்ற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று அறிவித்தார். இதன்படி தினசரி பள்ளிகளில் 3 அல்லது நான்கு முறை தண்ணீர் பெல் அடித்து மாணவர்களை தண்ணீர் குடிக்க வைப்போம் என்றார்.
இதனிடையே தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்தவையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசுமேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் பாடவேளைகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது.
பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களையும் தண்ணீர் பாட்டிலை வீட்டில் இருந்து எடுத்து வரச்சொல்லி தண்ணீர் பெல் என்று பெல் அடித்து பாட வேளைகளில் தண்ணீர் அருந்துவார்கள். இது குறித்து செய்திகள் இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், கேரளாவைப்போல் தமிழகத்திலும் பள்ளிகளில் பாட வேளைகளில் தண்ணீர் குடிப்பதற்கு 10 நிமிடம் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்படும் என்றார்.
அத்துடன் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்கு பயிற்சிகளும் இனி அரசு பள்ளிகளில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications