இவ்வளவு மழை பெய்யும் என்று முன்கூட்டியே துல்லியமாக சொல்ல முடியாது- ரமணன்
சென்னை: எவ்வளவு மழை பெய்யும் என்று துல்லியமாக கணிக்கும் வசதி இன்று இல்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் அது வரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் நல்லதொரு வட கிழக்குப் பருவ மழைக்காலம் வந்துள்ளது. மக்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்து விட்டது.
குறிப்பாக சென்னையில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு மழை பெய்ததால் நகரமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளக்காடாகி விட்டன.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வெளுத்த மழை
தமிழகத்தில் இந்த வருடம் தாமதமாகவே வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. ஆனால் நல்ல மழைப் பொழிவைக் காண முடியும் என்று வானிலை மையம் கூறியிருந்தபடி அட்டகாசமான மழையை தமிழக மக்கள் கண்டு வருகின்றனர்.

இயல்பு நிலையைத் தாண்டியது
தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டியதை விட அதிகமாகவே தற்போது மழை பெய்துள்ளது. அதாவது இயல்பை விட 4 செமீ அதிக மழை பெய்துள்ளது தமிழகத்தில்.

சென்னைக்கு டபுள் கொட்டு!
சென்னையிலேயே இயல்பை விட இரு மடங்கு அதிக மழை பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்ஏறு வரை 57 செ.மீ., மழைதான் பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 114 செ.மீ., சென்னையில் பெய்துள்ளது. இதனால்தான் சென்னை நகரமும், சுற்றுப் பகுதிகளும் வெள்ளக்காடாகி விட்டன.

ஏன் கணிக்க முடியவில்லை?
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ரமணனிடம் ஏன் இவ்வளவு மழை பெய்யும் என்று கணிக்க முடியவில்லை என்று கூறியபோது, இப்போதைக்கு மழை அளவை துல்லியமாக கணிக்கும் வசதி இல்லை. நம்மிடம் மட்டுமல்ல யாரிடமும் அது இல்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் அந்தத் தொழில்நுட்பம் வரலாம்.

எல் நினோவுக்குத் தொடர்பில்லை
பசிபிக் பகுதியில் நிலவி வரும் எல் நினோவுக்கும், தற்போது தமிழகத்தில் பெய்து வரும் கன மழைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது இரு வேறு நிகழ்வுகள்.

தாழ்வு வந்தால் நிறைய மழை வரும்
தமிழகத்தைப் பொறுத்தவரை புயல்களை விட தாழ்வு நிலைகளால்தான் அதிக மழை கிடைத்துள்ளது. தற்போதும் கூட தாழ்வு நிலைகளால்தான் அதிக மழை கிடைத்துள்ளது.

மன்னாரில் வந்தால்
குறிப்பாக மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்படும்போதெல்லாம் தமிழகத்திற்கு மிக நல்ல அளவில், பெரிய அளவில் மழை கிடைத்துள்ளது என்றார் ரமணன்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications