ஓ.பி.எஸ்ஸை விட மாட்டோம்.. ஜி.கே.வாசன் உறுதி!
சென்னை: ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி சுமூகமாக உள்ளது. எனவே இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் கடைசி வரை அதிமுகவை நம்பியிருந்து பின்னர் அதிமுகவால் கைவிடப்பட்ட தமாகா கடைசியில் மக்கள் நலக் கூட்டணியில் போய்ச் சேர்ந்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழந்தது.
இந்த நிலையில் அரசியல் அரங்கில் தனித்து நிற்கும் தமாகா ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓ.பி.எஸ் அணியுடன் கூட்டணி சேர்ந்தது. புதிய கூட்டணி உருவாகி விட்டதாகவும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

கூட்டணி தொடரும்
இந்த நிலையில் கூட்டணி நீடிப்பதாகவும், அது தொடரும் என்றும் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நேற்று தி.நகரில் வாசன் நடத்தினார். அதில்தான் இதை அவர் அறிவித்தார்.

சுமூகமாக உள்ளது
ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் அறிவிக்கப்பட்ட கூட்டணி சுமுகமாக உள்ளதால், உள்ளாட்சி தேர்தலிலும் அது தொடரும்.

தீவிர ஆலோசனை
உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை அமைப்பு ரீதியாக 14 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும், வெள்ளிக்கிழமை 18 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.

விவசாயிகள் தற்கொலை
விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தவறான தகவல்கள் உள்ளன. அதைத் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் வாசன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications