ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டாவை சட்ட ரீதியாக சந்திப்போம்: பொன்.ராதாகிருஷ்ணன் அதிரடி
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா விலங்குகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தால், அதை மத்திய அரசு எதிர்கொள்ளும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டது. இந்த உத்தரவை பெறுவதற்காக தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன். எனவே எதிர்க்கட்சிகளும் கூட பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றியும், வாழ்த்துகளையும் கூறியுள்ளன. இந்நிலையில், பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார். மதுரை விமான நிலையத்தில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், பாஜக தொண்டர்களும், மதுரை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மாலை அணிவித்து, மேள, தாளத்தோடு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஜல்லிக்கட்டின்போது மாடுகள் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறி, உச்சநீதிமன்றத்தில், தடை கேட்டு வழக்கு தொடரப்படும் என்று பீட்டா எனப்படும் விலங்குகள் நல அமைப்பு அறிவித்துள்ளது குறித்து, பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த பொன்.ராதாகிருஷ்ணன், "பீட்டா வழக்கு தொடர்ந்தால், அதை மத்திய அரசு சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்" என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications