ஜிஎஸ்டியில் வரிவிலக்கு வேண்டும்... நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்- தம்பிதுரை வாக்குறுதி: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: ஜிஎஸ்டி வரிவிதிப்பால் பாதிக்கப்படும் துறைகளுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

மத்திய அரசு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை நள்ளிரவில் அமுல்படுத்தியதிலிருந்து பல்வேறு துறையை சேர்ந்தவர்களிடம் இருந்தும் எதிர்ப்பு வலுத்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் கூறிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,'' ஜிஎஸ்டி வரிமுறையால் பட்டாசு உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கபப்டுவதாக செய்திகள் வருகின்றன.

 We will raise our voice to give exemption from gst in parliament said Thambi durai

இதுபோன்று பாதிக்கப்படும் துறைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அதிமுக நிச்சயம் குரல் எழுப்பும்'' எனக் கூறினார். பட்டாசு தொழில்துறையினர் மட்டுமல்லாது பல நாட்களாக ஈரோடு ஜவுளித்துறையினர் வரிவிலக்கு வேண்டும் என போராடி வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
We will raise our voice to give exemption from gst in parliament said Thambi durai, Deputy speaker.
Please Wait while comments are loading...