காய்கறி சந்தையில் எடை மோசடி செய்கிறார்களா? புகார் கொடுக்க வந்தாச்சு செல்போன் ஆப்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: சந்தையில் காய்கறிகளின் எடையைக் குறைத்து கணக்கிடும் எடை இயந்திரங்கள் மற்றும் எடை கற்களை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் சாந்தி ஆய்வு செய்து, எடை குறைவாகக் காட்டிய மின்னணு மெஷின்களையும் எடைக்கற்களையும் பறிமுதல் செய்தார்.

மதுரையில் காய்கறி சந்தையில் எடையைக் குறைத்து மதிப்பிடும் மின்னணு எடை இயந்திரங்கள், தராசு எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டு பொதுமக்களை ஏமாற்றுவதாக தொழிலாளர் நலத்துறையினருக்கு புகார் சென்றது.

Weighing Machine Madurai Market Labor Welfare Official

இதையடுத்து மதுரை தொழிலாளர் நலத்துறையின் ஆய்வாளர் சாந்தி காய்கறிக்குச் சென்று ஆய்வுசெய்தார். அப்போது மின்னணு எடை இயந்திரத்திலும் தராசு எடைக் கற்களிலும் எடை கணக்கு குறைபாடு இருப்பதைக் கண்டறிந்தார்.

அப்படி தவறாக திருத்தியமைக்கப்பட்ட மின்னணு இயந்திரங்களையும் தராசு எடைக் கற்களையும் அவர் பறிமுதல் செய்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது,''தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கும் சட்டமுறை எடை அளவு பிரிவின் கீழ், ஒரு புதிய ஆப் கொண்டுவரப்பட்டுள்ளது. TN-LMCTS என்ற அந்த ஆப்பை, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

அந்த மொபைல் ஆப் மூலம், இம்மாதிரியான அளவு குறைபாடு புகார்களை அனுப்பினால் மூன்று நாட்களுக்குள் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மொபைல் மூலம் புகார் அளிக்க முடியதஹவர்கள் தொழிலாளர் நலத்துரையில் நேரடியாகவும் புகார் தெரிவிக்கலாம் எனவும் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Labor welfare department introduced new mobile app to give complaint about cheating in measurements in shops, department stores etc.,. Madurai labor welfare officer Shanthi taken action against the cheat in measurements
Please Wait while comments are loading...