இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்... விஜய்க்கு சீமான் திடீர் அழைப்பு?
சென்னை: இந்திய மற்றும் திராவிட கட்சிகளைத் தவிர்த்து நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணிக்கு எந்த கட்சியாவது வந்தால் அது குறித்து பரிசீலனை செய்வோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதனால் தேசிய மற்றும் திராவிட கட்சி வரிசையில் இல்லாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்குதான் சீமான் மறைமுகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: உலகத்தின் 20 நாடுகள் ஒன்று திரண்டு நின்ற போது தன் நாட்டு மக்களை நம்பி படைதிரட்டி யுத்தம் செய்த தலைவன் பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள். எனக்கு ஒரு தலைவன்; எனக்கு ஒரு தத்துவம்; எனக்கு ஒரு நோக்கம்; எனக்கு ஒரு கொள்கை; மொழி- இனத்தை முன்னிறுத்தும் அரசியல்; வேளாண்மையை முன்னிறுத்தும் தற்சார்பு பசுமை பொருளாதாரம் என இருக்கிறது. இந்த கோட்பாடுகள் சரியானவை என நினைத்து எங்களுடன் இணைந்து நிற்க வந்தால் யோசிப்போம்.

அதுவும் இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து யாராவது கூட்டணிக்கு வந்தால் யோசிக்கலாம். ஆனால் யாரும் வரமாட்டார்கள். கூட்டணி என்றால் சீட்டு, நோட்டு (பணம்) வேண்டும் என்பர். என்னிடம் இந்த இரண்டுமே இல்லை. ஆகையால் கூட்டணி குறித்து கேள்விகளை கேட்காமல் விட்டுவிடுங்கள். இந்த கேள்விகளுக்கு நானும் பலமுறை பதில் அளித்துவிட்டேன். இவ்வாறு சீமான் கூறினார்.
ஆனால் இந்த பேட்டியில், இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்த கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்ற கருத்தை சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமானது, இந்திய- திராவிட கட்சிகளின் வகைகளில் சேராமல் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் இயங்குகிறது. இதனால் சீமானின் இந்த கருத்து, நடிகர் விஜய்க்கு விடுக்கப்பட்ட மறைமுகமான அழைப்பா? என்ற கேள்வியும் எழுகிறது. தமிழக தேர்தல் களத்தில் தற்போதைய நிலையில் சீமான், விஜய் ஆகிய இருவரது கட்சிகளும்தான் தனித்து நிற்கும் சூழ்நிலையில் உள்ளன. ஆகையால் சீமானின் இந்த மறைமுக அழைப்பு விஜய்க்குதானா? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
-
காணொலி விசாரணைக்கு நோ சொன்ன நீதிமன்றம்! முதல்வர் விஜய்-சங்கீதா நேரில் ஆஜராகனும்! விசாரணை ஒத்திவைப்பு -
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
அடித்து தூக்கும் விஜய்.. நில ஒதுக்கீட்டில் ராக்கெட் வேகம்.. லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
“மக்களை நாய்கள் என்று சொல்லவில்லை.. நான் பேசியதை தவறாக பரப்புகின்றனர்” - ராகவா லாரன்ஸ் விளக்கம்! -
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல்












Click it and Unblock the Notifications