மேற்கு தாம்பரத்தை வழக்கம் போல வெள்ள நீர் சூழ்ந்தது- வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

  சென்னை: கனமழை பெய்தால் எப்படி வடசென்னை தனித் தீவாகிவிடுகிறதோ அதேபோல மேற்கு தாம்பரமும் வெள்ளத்தில் மிதப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. தற்போது பெய்த கனமழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

  பொதுவாக மேற்கு தாம்பரம் பகுதியில் சாதாரண மழை பெய்தாலே பல அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நிற்கும். அதேபோல் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறந்துவிட்டாலும் வெள்ளத்தால் மிதந்துவிடும் மேற்கு தாம்பரம்.

  West Tambaram residents forced to leave from homes

  தற்போது ஒரே நாளில் 16 செ.மீ மழை தாம்பரம் பகுதியில் கொட்டித் தீர்த்துவிட்டு ஓய்ந்திருக்கிறது. இதனால் மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலை பகுதிகளில் பல அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது.

  கிருஷ்ணா நகர், லட்சுமி நகர், கண்ணன் அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. இதனால் அப் பகுதிகளில் இருந்து பலரும் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

  பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

  English summary
  Due to the heavy rain West Tambaram residents forced to leave their homes.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X