டிஎஸ்பிடா ஓடுங்க.. ஓரினச்சேர்க்கையாளர் தான் டார்க்கெட் .. தென்காசியில் இப்படி ஒரு டேட்டிங் ஆப்பா?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களிடம் இருக்கும் பணத்தை பறித்துக் கொண்டு விரட்டியடிக்கும் கும்பல் தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் போலீசாரிடம் வசமாக சிக்கி உள்ளது.

நூதனமான முறையில் ஓரினச்சேர்க்கை நடந்து வந்திக்கிறது தென்காசி பகுதியில்.. செல்போன் ஆப் மூலம் புக்கிங் செய்து நடத்தி இருக்கிறார்கள்.. அப்படி வருவோரை மிரட்டி பணத்தை பறித்துவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறது ஒரு கும்பல்.. போலீஸில் யாரும் புகார் அளிக்கவில்லை. எதார்த்தமாக போலீஸார் அந்த வழியில் சென்ற போது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஓடி சிக்கி கொண்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

What a gang of teenagers did with a dating app in Tenkasi?

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் சிலர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி வருவதாக தெனகாசி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து தென்காசி மாவடட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் புளியங்குடி சரகத்தில் போலீசார் வாகன ரோந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புளியங்குடி பேருந்து நிலையம் அருகே வேன் ஸ்டாண்ட் பகுதியில் ஓட்டுநர்களிடம் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறது. பேருந்து நிலையம் அருகே சென்ற போது தகராறு ஈடுபட்ட அந்த கும்பல், போலீஸை பார்த்ததும் அவசர அவசரமாக தாங்கள் வந்த காரில் ஏறி வேகமாக தப்பியது.

காரில் வேகமாக ஏறி ஓடுவதை பார்த்த டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் காரை விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர். அப்போது காரில் இருந்த ஆறு பேருடன் காரையும் புளியங்குடி காவல் நிலையத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், உள்ளார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது உள்ளார் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ் (வயது 19), சதீஷ் (வயது 20), சிவகிரி பகுதியைச் சேர்ந்த கவிக்குமார் (வயது 21), அதே சிவகரி பகுதியைச் சேர்ந்த கனகராஜ் (வயது 22) ஆகிய நான்கு பேருடன் , 18 வயது நிரம்பாத 2 சிறுவர்களும் இருந்தனர்.

இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால்,சிவகிரி பகுதியில் தனியார் செல்போன் செயலி மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து ஓரினச்சேர்க்கைக்கு வரவழைக்கிறார்கள். மோகத்தில் வருவோரிடம் மிரட்டி இருக்கும் பணத்தை பறித்துக் கொண்டு விரட்டியடிப்பதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறது. இதுவரை யாரும் புகார் அளிக்காததால் விஷயம் வெளியே தெரியவில்லை.

இந்த கும்பல் சிலமாத காலமாக பல்வேறு நபர்களிடம் இருந்தும் பணம் பறித்திருக்கிறது. இதனை 6 பேரும் ஒப்புக் கொண்டிருக்கிறது. கைதானவர்களிடம் புளியங்குடி காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+