For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இணைந்து பணியாற்றுவது வேறு.. கூட்டணி வேறு.. ரஜினியின் கருத்துக்கு ரசிகர்கள் தரும் அர்த்தம் இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலில் ஒன்றிணைவது குறித்து ரஜினி, கமல் பரபரப்பு பேட்டி

    சென்னை: இணைந்து பணியாற்றுவது வேறு கூட்டணி அமைத்து பணியாற்றுவது வேறு என ரஜினிகாந்த் நேற்று கூறிய கருத்துக்கு ரசிகர்கள் புதியதொரு அர்த்தம் கற்பித்துள்ளனர். இதிலிருந்து இவர்களின் விருப்பம் என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

    ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் திரைத்துறையில் சேர்ந்து நடித்த காலத்திலிருந்தே இருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் உருவாயிற்று. இரு தரப்பும் எதிரும் புதிருமாகவே இன்று வரை உள்ளனர்.

    ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அவர் முதல்வராக வேண்டும் என இவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதே நேரத்தில் கமல்ஹாசன்தான் முதல்வராக வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

    வண்ணம்

    வண்ணம்

    ரஜினியும் கமலும் என்னதான் நல்ல நண்பர்கள் என்பதை ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு நிரூபித்தாலும் இரு தரப்பு ரசிகர்களுக்கிடையேயான பகை அதிகரித்த வண்ணம்தான் உள்ளன. இந்த நிலையில் கமலின் உங்கள் நான் நிகழ்ச்சியில் ரஜினியும் கமலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஒரு கோரிக்கை எழுந்தது.

    தவறு இல்லை

    தவறு இல்லை

    இந்த கோரிக்கையை ஏற்கெனவே ரஜினியிடம் கமல் முன்வைத்திருந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தின் மேம்பாட்டிற்காக இணைந்து பணியாற்றுவதில் எந்தவித தவறும் இல்லை.

    நிச்சயம்

    நிச்சயம்

    இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய அவசியமேற்பட்டால் இணைவோம் என்றார். இவர் சொல்லி முடித்த சிறிது நேரத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கமலுடன் இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவேன் என்றார்.

    எப்படி சாத்தியம்

    எப்படி சாத்தியம்

    ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலை முன்னெடுத்து வருகிறார். அது போல் கமல்ஹாசனோ பகுத்தறிவு அரசியலை முன்னெடுக்கிறார். அப்படியிருக்கையில் இருவரும் இணைவது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காரணமில்லை

    காரணமில்லை

    இந்த நிலையில் ரஜினியின் கருத்திற்கு சில ரசிகர்கள் விரும்பவில்லை. இருவரும் இணைந்தால் யார் முன்னிலைப்படுத்தப்படுவார்கள், யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இன்னும் சிலரோ நம்மை காட்டிலும் ரஜினி அனுபவசாலி அவர் எதையும் காரணமில்லாமல் சொல்லமாட்டார் என்கின்றனர்.

    தேர்தலை இணைந்து சந்திப்போம்

    தேர்தலை இணைந்து சந்திப்போம்

    இன்னும் சில ரசிகர்களோ, தமிழக மக்களுக்காக இணைந்து செயல்படுவோம் என்றுதானே ரஜினி சொல்லியுள்ளார். கூட்டணி அமைப்போம், சேர்ந்து சட்டசபை தேர்தலை சந்திப்போம் என கூறவில்லையே. எனவே இணைந்து செயல்படுவோம் என்பது வேறு, கூட்டணி அமைப்போம் என்பது வேறு, தேர்தலை இணைந்து சந்திப்போம் என கூறுவது வேறு என புதிய அர்த்தத்தை கற்பித்துள்ளனர். இதற்கு ரஜினியே விளக்கும் வரை பல்வேறு யூகங்கள் நிலவத்தான் செய்யும்.

    English summary
    Rajinikanth's fans created a new meaning for his comment on joining hands with Kamal haasan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X