For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா முதல்வராக பதவியேற்பது எப்போது?

சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா வரும் 9ம் தேதி பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா தற்போது சட்டசபைக் குழு தலைவராக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 9ம் தேதி பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, 7 அல்லது 9ம் தேதியில் அவர் முதல்வராக பதவி ஏற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

When Sasikala's swearing in ceremony?

பொறுப்பு கவர்னர் வித்யாசாகர ராவ் தற்போது வட மாநிலம் ஒன்றில் இருப்பதால் சென்னைக்கு உடனடியாக வருவதற்கு வாய்ப்பில்லை. திங்கள் கிழமைக்கு பிறகுதான் கவர்னர் சென்னைக்கு வருகிறார். அதன் பின்னரே அவரை சந்தித்து முறைப்படி பதவி ஏற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும் என்பதால் 7 அல்லது 9ம் தேதி சசிகலா பதவி ஏற்கும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்த பிறகு சரியாக இரண்டு மாதத்தில் சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
ADMK general secretary Sasikala migh be sworn on 9th of Feb, source said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X