திமுக கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது ? ஸ்டாலின் பதில் !
சென்னை: தேர்தல் தேதி அறிவித்த பின்னரே திமுகவின் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. பிரதான கட்சிகளான திமுக, அதிமுக அணியில் எந்தெந்த கட்சிகள் சேரப்போகிறது என்பது இன்னும் தெரியவில்லை. அதே நேரத்தில் இவ்விரு கட்சிகளும் தேர்தல் பிரச்சார களத்தில் இப்போதே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது துவங்கும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஸ்டாலின், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும்.
அமைச்சர்கள் ஊழல், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து ஆளுநரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த ஊழல் புகார் குறித்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினார் ஜல்லிக்கட்டு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறிய கருத்துக்கு பதில் அளிக்க ஸ்டாலின் மறுத்துவிட்டார்
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications